குன்னூர்: நிழற்குடை மதுக்கூடமாக மாறிய அவலம்

60பார்த்தது
குன்னூர்: நிழற்குடை மதுக்கூடமாக மாறிய அவலம்
குன்னூர் நகராட்சிக்குட்பட்ட ஓட்டுப்பட்டறை முத்தாலம் மன்பேட்டை பகுதியில் நகராட்சி மூலம் பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது. அரசு பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் நின்று செல்லும் இந்த நிழற்குடை, அப்பகுதி மக்களுக்கு பேருந்துக்காக காத்திருக்கும் இடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. 

இதற்கிடையே, அப்பகுதியில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணிகளுக்காக ஒப்பந்ததாரர் ஜல்லி, கம்பி, மணல் மற்றும் சிமெண்ட் மூட்டைகளை பயணிகள் நிழற்குடையில் வைத்து பயன்படுத்தி வந்துள்ளார். சமுதாயக்கூடம் கட்டுமான பணி நிறைவடைந்த பின்னர், நிழற்குடை முறையாக சுத்தம் செய்யப்படவில்லை. 

இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், இரவில் மது பிரியர்கள் இந்த நிழற்குடையை மது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர். இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

எனவே, நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு, நிழற்குடையை முறையாக பராமரித்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி