தேவாலா: வனப்பகுதியில் காட்டு யானை சடலம்!

1பார்த்தது
தேவாலா: வனப்பகுதியில் காட்டு யானை சடலம்!
தேவாலா அருகிலுள்ள காட்டிமட்டம் வனப்பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று நேற்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர், ஆழமான பள்ளத்தாக்கில் நீரோடையில் யானையின் உடல் பாகங்களை கண்டனர். வன அலுவலர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். யானையின் 2 தந்தங்கள் பாதுகாப்பாக கைப்பற்றப்பட்டு, அவற்றின் அளவு மற்றும் எடை பதிவு செய்யப்பட்டது. யானை எவ்வாறு இறந்தது என்பது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது. பள்ளத்தாக்கில் இருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது, ஆனால் இதுவரை உறுதியான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தொடர்புடைய செய்தி