நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் சந்தனமரம் வெட்டிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி வனச்சரகத்திற்குட்பட்ட வாகப்பனைச் சரிவு காப்புக்காட்டில் வழக்கமான ரோந்து பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டிருந்தபோது மரம் வெட்டும் சத்தத்தைக் கேட்டு சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். வனத்துறையினரை கண்ட இருவர் அங்கிருந்து தப்பித் தப்பிப் போயினர். அதைத்தொடர்ந்து வெட்டப்பட்டது சந்தனமரம் என்றும், துரத்திப் பிடிக்கும்போது இருவரும் தப்பிச்சென்று விட்டனர். பின்னர் மாவட்ட வனஅலுவலர் உத்தரவின்படி சந்தனமரம் வெட்டியவர்களைத் தேடிய வனத்துறை கோத்தகிரி அருகே உள்ள குஞ்சபனை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், சின்ராசு ஆகிய இருவரையும் கைது செய்தனர். தமிழ்நாடு வனச்சட்டம் 1882-ன்படி சந்தனமர குற்றம் பதிவு செய்து குற்றவாளிகள் இரண்டு பேரையும் கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.