நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மஞ்சூர்-கோவை சாலையில் நேற்று மண் சரிவு மற்றும் மரம் விழுந்து
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கெத்தை வனப்பகுதியில் சாலையில் மண் மற்றும் பாறைகள் சரிந்ததால் வாகனங்கள் நீண்ட நேரம் நின்றன. நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் மூலம் மண்ணையும் மரத்தையும் அகற்றி சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் மாவட்டத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.