கோத்தகிரி: கேரட் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்!

0பார்த்தது
கோத்தகிரி: கேரட் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்!
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரட் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கேரட்டுக்கு நிலையான கொள்முதல் விலை கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கிலோவுக்கு ரூ. 50 ஆக இருந்த விலை தற்போது தரத்திற்கு ஏற்ப ரூ. 70 வரை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது. ஒரு ஏக்கர் கேரட் பயிரிட சுமார் 1½ லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், 60 முதல் 100 மூட்டைகள் வரை விளைச்சல் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நந்தினி, ரொமான்ஸ், போர்ட் எப் போன், ஜிவேரா போன்ற பல்வேறு ரக விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது தனியார் நிறுவனங்கள் நேரடியாக புலம் மட்டத்திலேயே கொள்முதல் செய்வதால், போக்குவரத்து செலவுகள் குறைந்து விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி