தவெக மாநாட்டிற்கு வந்த கோத்தகிரி இளைஞர் திடீர் மரணம்

327பார்த்தது
தவெக மாநாட்டிற்கு வந்த கோத்தகிரி இளைஞர் திடீர் மரணம்
மதுரையில் நேற்று (ஆக. 21) நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வந்த நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சேர்ந்த தனியார் கொரியர் நிறுவன ஊழியர் ரோஷன் (22) என்பவர், குன்னூர் தொகுதி தவெக இணை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷுடன் காரில் வந்தபோது மயக்கமடைந்துள்ளார். 

மாநாட்டு மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று ஊர் திரும்பும்போது சமயநல்லூர் பைபாஸ் சாலையில் மீண்டும் மயக்கமுற்று பரவை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி