ஊட்டி: 2 சிறுத்தைகள் மர்மச்சாவு; வனத்துறை விசாரணை

367பார்த்தது
ஊட்டி: 2 சிறுத்தைகள் மர்மச்சாவு; வனத்துறை விசாரணை
ஊட்டி அருகே மஞ்சக்கொம்பை வனப்பகுதியில் 2 சிறுத்தைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதில் 2 வயது பெண் சிறுத்தை தண்ணீரில் ஒன்றும், 6 வயது ஆண் சிறுத்தை நிலத்தில் ஒன்றும் அருகருகே சடலமாக கிடந்தன. வனத்துறையினர் நடத்திய ஆய்வில், சிறுத்தைகளின் உடலில் செந்நாய்கள் கடித்த தடயங்கள் காணப்பட்டதால், செந்நாய்கள் தாக்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரம் தெரியவரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி