நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 18-ஆம் தேதி தொடங்கும் 128-ஆவது மலர் கண்காட்சியை முன்னிட்டு, அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் அரசு ஊழியர்களின் வசதிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜூன் 6-ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்துக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருவூலங்கள் அவசர பணிகளுக்காக செயல்படும்.