நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் ஆகியோர் கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலையில் திட்டத்தை தொடங்கி வைத்தனர். அதிகாலை பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் காலை உணவு தவறாமல் பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் 5 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் மொத்தம் 1,035 பணியாளர்களுக்கு இட்லி, வடை, பொங்கல், கிச்சடி, உப்புமா போன்ற மாறுபட்ட உணவுகள் வாரந்தோறும் வழங்கப்படும்.