கூடலூரை அடுத்த பிதற்காடு கைவட்டா பகுதியில் சுகுமாரன் என்பவரை காட்டு யானை தாக்கியதில் அவர் காயமடைந்தார். நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில், அப்பகுதி மக்கள் அவரை மீட்டு பத்தேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட கார் கேமரா காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.