நீலகிரி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி!

4பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான லக்ஷ்மி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் போன்ற பணிகளுக்காக படிவங்கள் பூர்த்தி செய்வது குறித்த செயல்முறை விளக்கத்தை அவர் கவனித்தார். பொதுமக்கள் எளிதாகவும் சரியான முறையிலும் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள தேவையான வழிகாட்டுதல், வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைவரும் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து, தேவையான திருத்தங்களை உடனடியாகச் செய்யுமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி