நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவனல்லா கிராமத்தில், புலி ஒன்று பெண்ணைத் தாக்கி இழுத்துச் சென்றது. பொதுமக்கள் கூச்சலிட்டு புலியை விரட்டியபோது, அது பெண்ணை மேலும் உள்ளே இழுத்துச் சென்றது. இறுதியில், பெண்ணைக் கொன்று நீரோடையில் புலி விட்டுச் சென்றது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.