நீலகிரி மாவட்டம், ஊட்டி கேத்தியில் உள்ள சி. எஸ். ஐ. பொறியியல் கல்லூரியில் 127-வது விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. ரெட் ரிப்பன் கிளப்பின் தலைவர் கோபால் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் அருமைராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில், தலைமைப் பண்பு அனைவருக்கும் இருக்க வேண்டிய முக்கியமான குணம். வெற்றி, தோல்வியை விளையாட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தோல்விகளை வெற்றிக்கான படிக்கற்களாக மாற்ற வேண்டும். வெற்றியை அடைய தோல்வியின் அனுபவங்கள் உதவும். கல்லூரியில் இருந்து வெளியேறும் முன்பு மாணவர்கள் படிப்புடன் கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.