பந்தலுார் அருகே கரியசோலை வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வழிதவறி தவித்த கேரள மாநிலத்தை சேர்ந்த 9 இளைஞர்களை வனத்துறையினர் நேற்று இரவில் மீட்டனர். யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ள பகுதியில் சுற்றித்திரிந்த அவர்களுக்கு தலா ரூ. 2, 500 வீதம் மொத்தம் ரூ. 22, 500 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். சமூக வலைதளங்களுக்காக வனப்பகுதிக்குள் நுழைவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.