கூடலூர் அருகே முதுமலை மசினகுடி-மாயாறு சாலையில் பகல் நேரங்களிலும் புலிகள் சாலையை கடந்து செல்வது அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. வனவிலங்குகளுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயாறு சாலையில் புலிக்குட்டி ஒன்று நேற்று (மே 21) சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.