ஊட்டி: தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்!

0பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பஸ்ஸில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் நேற்று ஊட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. ரகசிய தகவலின் பேரில், ஊட்டி படகு இல்லம் அருகே நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், பஸ் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 819 அரை லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறலுக்காக சுற்றுலா பஸ் டிரைவருக்கு ரூ. 40,000 அபராதம் விதிக்கப்பட்டது.