உதகை தொட்டபெட்டா சிகரம் சுற்றுலாத் தளத்தில் சர்க்யூட் பேருந்துகள் பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பேருந்துகளில் ஏற முயன்ற பயணிகளிடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி, அடிதடி சம்பவங்கள் வரை சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளை அவர்களது சொந்த வாகனங்களிலேயே அனுமதித்திருக்கலாம் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.