நீலகிரி மாவட்டம் உதகையில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, ரூ. 40 லட்சம் மதிப்பில் நாய்களுக்கான சிறப்பு பெட் பார்க் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா நேற்று இந்தப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பூங்காவில் நாய்களுக்கான விளையாட்டு மைதானம், ஓய்வு பகுதி, நீச்சல் தொட்டி, மருத்துவ பரிசோதனை வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் செல்லப்பிராணி அன்பர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.