ஊட்டி: மாம்பழ வாசனைக்கு ஈர்க்கப்பட்ட யானை காரை புரட்டி சேதம்

0பார்த்தது
மசினகுடி அருகே மாவனல்லா பகுதியில் உள்ள தனியார் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை, கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பகத் அப்துல்லா பைசரின் காரை முட்டி புரட்டி சேதப்படுத்தியது. காரில் இருந்த மாம்பழ வாசனைக்கு ஈர்க்கப்பட்ட யானை இந்த செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி