ஊட்டி: 110 பழங்குடியினர் வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு

0பார்த்தது
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட லைட்பாடி கிராமத்தில் உள்ள 110 பழங்குடியினர் வீடுகளுக்கு பி. வி. டி. ஜி. திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா நேற்று இந்த மின் இணைப்பை தொடங்கி வைத்தார். ஏற்கனவே 105 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 வீடுகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 38 லட்சம் ரூபாய் மதிப்பில் 1,010 பழங்குடியினர் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி