நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் குஞ்சப்பனை ஊராட்சி மற்றும் கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்காளர்களுக்கு குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை, சாய்வு நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என பரிசோதித்த அவர், குறைபாடுகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேர்தல் பணிகள் சீராக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.