நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே நுந்தளாமட்டம் பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் சில்வர் ஓக் மரத்தில் சிறுத்தை ஒன்று ஓய்வெடுத்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் சத்தமிட்டு செல்போனில் வீடியோ எடுத்ததால், சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.