ஊட்டி: ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு: குண்டர் சட்டம் பாய்ந்தது

0பார்த்தது
ஊட்டி: ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு: குண்டர் சட்டம் பாய்ந்தது
ஊட்டியில் இருந்து கூடலூருக்கு ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது (33) மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த மாதம் 24-ஆம் தேதி ஊட்டி அருகே வாகன சோதனையின்போது 35 மூட்டைகளில் 1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. வாகன ஓட்டுநர் முகமது கைது செய்யப்பட்டார். இவர் மீது 2021-ஆம் ஆண்டிலும் இதேபோன்ற குற்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவதைத் தடுக்க போலீஸ் சூப்பிரண்டு நிஷா பரிந்துரையின்பேரில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, முகமது கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்புடைய செய்தி