ஊட்டி: வாகன நிறுத்துமிடத்துடன் தற்காலிக கடைகள் அமைப்பு!

1பார்த்தது
ஊட்டி: வாகன நிறுத்துமிடத்துடன் தற்காலிக கடைகள் அமைப்பு!
குன்னூரில் ரூ. 41.50 கோடி மதிப்பில் வாகன நிறுத்த வசதியுடன் புதிய கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 324 பழைய கடைகள் காலி செய்யப்பட்டு, வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடாக உழவர் சந்தை பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் இல்லையென வியாபாரிகள் குற்றம் சாட்டினர். சமீபத்திய மழையால் சில தற்காலிக கடைகளில் வெள்ளம் புகுந்ததால், நகராட்சி புதிய திட்டம் மூலம் மார்க்கெட் அருகே 2-ம் கட்டமாக மேலும் 57 கடைகள் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. ஆனால், சில கடைகளின் அளவீடு மாறுபட்டதாக இருப்பது வியாபாரிகளில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி