ஊட்டி: கால்வாயில் தவறி விழுந்த புலிக்குட்டி பலி

224பார்த்தது
ஊட்டி: கால்வாயில் தவறி விழுந்த புலிக்குட்டி பலி
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாயாறு அணை கால்வாயில் நேற்று ஒரு பெண் புலிக்குட்டி இறந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். புலிக்குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில், அதன் உடலுக்குள் தண்ணீர் இருந்தது தெரியவந்தது. இரவில் தண்ணீர் குடிக்க வந்தபோது கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி