பந்தலூர் முருகன் ஆலய கும்பாபிஷேக விழா!

0பார்த்தது
பந்தலூர் அருள்மிகு முருகன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற ஆலய திருப்பணிக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன், கோயில் கமிட்டியின் கோரிக்கையை ஏற்று தனது நட்பு வட்டம் மூலம் ஜப்பான் நாட்டின் ஆதரவைப் பெற்றுத் தந்தார். விழா சிறப்பாக நடைபெற உதவிய தொழிலதிபர் தியாக. குறிஞ்சி செல்வம், குருஜி மசாகிடோ அவயோமா தீபக் மற்றும் ஜப்பானிலிருந்து கலந்துகொண்ட அனைவருக்கும் தொகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். முன்னதாக பொன். ஜெயசீலனுக்கு கோயில் கமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி