உதகையில் எஸ். பிருந்தா ஐபிஎஸ் திடீர் ஆய்வு!

0பார்த்தது
நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். பிருந்தா, உதகை சேரிங்கராஸ் பகுதியிலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரை நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். பெண்களின் பாதுகாப்பு, சிசிடிவி கேமராக்கள், சாலை விளக்குகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார். கடைகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மூடப்படுகிறதா என்பதையும் கண்காணித்தார். பொதுமக்களின் பாதுகாப்புக்காக இதுபோன்ற ரோந்து மற்றும் ஆய்வுகள் தொடரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்தி