குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66வது பழ கண்காட்சி தொடக்கம்!

0பார்த்தது
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66வது பழ கண்காட்சி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. கோடை சீசனையொட்டி நடத்தப்படும் இந்த கண்காட்சியில், சுமார் 5½ டன் பழங்களால் உருவாக்கப்பட்ட டைனோசர் வடிவ அலங்காரங்கள் மற்றும் ஜூராசிக் பார்க் நுழைவாயில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ளன. 1 டன் பேரீச்சம்பழத்தால் ஆன டைனோசர் உட்பட பல்வேறு பழ சிற்பங்கள் முக்கிய ஈர்ப்பாக உள்ளன. 160 வகை பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. கோடை விடுமுறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் இதனை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி