உதகை அருகே சோலூா் பேரூராட்சி, கோக்கால் பழங்குடியினா் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் கட்டட வசதியின்றி மாணவர்கள் சிரமப்பட்டனர். தமிழக அரசு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கி புதிய ஆறு வகுப்பறை கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, இப்பள்ளியைச் சுற்றியுள்ள 6 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பள்ளிக்குத் தேவையான பீரோக்கள், மேஜைகள், நாற்காலிகள், திருவள்ளுவா் உருவப் படங்கள் உள்ளிட்ட பொருட்களை பள்ளிக்கு சீா்வரிசையாக வழங்கினர்.