வேகமாக பரவும் நிபா வைரஸ்.. தமிழக அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

24பார்த்தது
வேகமாக பரவும் நிபா வைரஸ்.. தமிழக அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, தமிழக மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என மாநில சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வௌவால்கள் அல்லது பறவைகள் கடித்த பழங்களை எக்காரணம் கொண்டும் உண்ண கூடாது என்று எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி