அமெரிக்காவின் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள், புவி கண்காணிப்பு பணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியின் நிலம் மற்றும் பனி பரப்புகளை ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒருமுறை கண்காணிக்கும். ரூ.11,284 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், பேரிடர் மேலாண்மை, விவசாயம், காலநிலை கண்காணிப்பு போன்ற பணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது பூமியில் ஏற்படும் நுட்பமான மாற்றங
்களையும் துல்லியமாகப் படமெடுத்து அனுப்பும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.