பீகார் மாநில முதலமைச்சராக நிதீஷ் குமாரே மீண்டும் தொடர, பிரதமர் தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின் மூலம், பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான புதிய அரசு அமைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.