பிகார் முதல்வர் நிதீஷ் குமார் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி உள்ளார். துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரிக்கு உள்துறை, விஜய்குமார் சின்ஹாவுக்கு வருவாய், நில சீர்திருத்தங்கள், சுரங்கம் மற்றும் புவியியல் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து 14 பேர், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 8 பேர், ராஷ்ட்ரீய லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.