தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,
திமுக, அதிமுக, நாதக, பாமக, அமமுக,
காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். ஆனால், எந்த கட்சிகளும் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கவில்லை. இதனை எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்களுக்கு பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது. 2021ம் ஆண்டு 5 சவரன் வரையிலான நகைக் கடன்களை
திமுக அரசு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.