சென்னையில் இன்று (நவ.06) அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமியுடன் நான் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை. பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக்கினால் வெற்றி பெற முடியாது என கிஷன் ரெட்டியிடம் கடிதம் அளித்தேன். தலைமை பொறுப்புக்கு சற்றும் தகுதி இல்லாதவர்தான் ஈபிஎஸ். அவர் தலைமையிலான கூட்டணி நிச்சம் வெற்றி பெறாது" என கூறினார்.