தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரைக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், “வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தேர்தல் பரப்புரைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம். தமிழ்நாட்டில் ஏப்ரல் 2-ஆவது வாரத்திற்கு முன்பே சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்” என தேர்தல் ஆணையத்திற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.