'நாங்கள் தற்குறிகள் இல்லை, தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆச்சர்யகுறிகள்' என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பில் இன்று (நவ., 23) பேசிய அவர், தவெகவினரை தற்குறிகள் என்று கூறுகிறார்கள். நம்மை தற்குறிகள் என்று கூறாதீர்கள் என்று திமுக எம்எல்ஏ ஒருவரே அவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். அதே போல், ஒவ்வொரு வீட்டிலும் நமக்கு ஆதரவு பெருகும். 'ஏண்டா விஜய்யை தொட்டோம், விஜய்யுடன் இருப்பவர்களை தொட்டோம்' என்ற நிலை வரும் என்று சூளுரைத்தார்.