எடப்பாடி தான் எங்கள் பொதுச் செயலாளர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்த நிலையில், அதிமுக உடைந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் இன்று (மே 22) செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, எப்போதும் சொல்கிறோம் எடப்பாடி பழனிச்சாமி தான் எங்களது பொதுச் செயலாளர். தேர்தல் தோல்வி குறித்து மட்டுமே நாங்கள் ஆலோசனை நடத்தினோம். கட்சியை பிளவுபடுத்தவில்லை. எங்களுக்குள் இருப்பது சிறிய கருத்துவேறுபாடுதான் என்று கூறினார்.