மெரினா கடற்கரையில் சாலையோர வியாபாரத்தை நெறிப்படுத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் சுற்றுச்சூழல் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் டிசம்பர் 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், மெரினா கடற்கரை மேம்பாட்டில் அக்கறை காட்டவில்லை என்றும் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அமல்படுத்துவதில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தது.