அதிகளவில் தண்ணீர் குடித்த பிறகும் தாகம் அடங்காமல் இருப்பது சாதாரண தாகமாக இல்லாமல், உடலில் சர்க்கரை நோய் அல்லது நீரிழப்பு போன்ற நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, சிறுநீரகங்கள் அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற முயல்வதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறைந்து அடிக்கடி தாகம் மற்றும் சிறுநீர் கழித்தல் ஏற்படுகின்றன. எனவே, இவ்வாறான அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் ரத்த பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.