அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், மாணவர்களின் உதவித்தொகை, மானியம் போன்றவற்றுக்கு பயன்படும் வருமான சான்றிதழை இனி வீட்டில் இருந்தே எளிதாகப் பெறலாம். Tnega என்ற அரசின் இணையதளப் பக்கத்தில் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தினால், 4 நாள்களில் சான்றிதழை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.