மஸ்க்கும் வேண்டாம், டெஸ்லா காரும் வேண்டாம்.. டிரம்ப் அதிரடி

1318பார்த்தது
டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் அதிபர் எலான் மஸ்க்குடனான மோதல் தீவிரமடைந்து வருவதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டெஸ்லா காரை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளை மாளிகை கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ள சிவப்பு நிற டெஸ்லா மாடல் எஸ் காரை விற்க டிரம்ப் தயாராகி உள்ளார். டெஸ்லா பங்குச் சந்தையில் சரிவை சந்தித்து வந்த நேரத்தில், மஸ்க்கிற்கு ஆதரவைக் காட்ட டிரம்ப் இந்த காரை வாங்கினார். இதனிடையே இருவருக்கும் இடையே மோதல் போக்கு வலுத்துள்ள நிலையில், டிரம்ப், மஸ்க்கை ஒதுக்கி விட்டார்.

தொடர்புடைய செய்தி