தமிழகத்தில் ஆவண எழுத்தர் உதவியின்றி பொதுமக்கள் தாங்களாகவே சொத்து பத்திரங்களை தயாரித்து பதிவு செய்யலாம் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இணையதளத்தில் உள்ள மாதிரி பத்திரங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆவணங்களை நிராகரிக்க கூடாது என சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறை மக்களுக்கான தேவையற்ற கூடுதல் செலவுகளை கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.