'சால்வை வேண்டாம்.. பேனா, பென்சில் போதும்'.. அமைச்சர் வேண்டுகோள்

3130பார்த்தது
'சால்வை வேண்டாம்.. பேனா, பென்சில் போதும்'.. அமைச்சர் வேண்டுகோள்
தன்னை சந்திக்க வருபவர்கள் மாலை, சால்வை, பூங்கொத்து மற்றும் பரிசுப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தனக்கு நோட்டு, பேனா, பென்சில், எழுதுபொருட்களை வழங்குமாறும், இந்த பொருட்கள் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி