விரைவில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையில் கூறியுள்ளார். கோபி செட்டிபாளையத்தில் இன்று (நவ.09) செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக என்பது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய, தியாகங்களால் வளர்ந்த இயக்கம். ஜெயலலிதா மன்னிக்கும் தன்மையுடன் உழைப்பவர்களை காத்த தலைவர். நானும் அவரின் வழியில் பயணித்து வருகிறேன். நான் இளவரசர் அல்ல. எளிமையானவன், உங்கள் வீட்டுப் பிள்ளை" என கூறினார்.