கோயில் திருவிழாக்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என்றும், அனைத்து சமூகத்தினரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பட்டியல் சமூக மக்கள் உட்பட அனைத்துச் சமூகத்தினரும் பாகுபாடின்றிச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.