கோவையில் பெண் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் “தான் கடத்தப்படவில்லை” என காருக்குள் இருந்து இளம்பெண் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். கோவை இருகூரில் காரில் பெண் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. “காருக்குள் இருக்கும் போது எனது கணவருடன் தகராறு ஏற்பட்டது. கணவர் என்னை அடித்தார். காருக்குள் இருந்த எங்களது மகன் திட்டியதால் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டோம்” என கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் விளக்கம் அளித்துள்ளார்.