வேலூர் கொல்லமங்கலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று (பிப்.23) நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், "யாரையும் நம்பி நாங்கள் ஏமாற மாட்டோம்; எங்களை யாரும் விலைக்கு வாங்கவும் முடியாது" என தொண்டர்களிடையே உரையாற்றினார். மேலும், இந்த கூட்டத்தில், "எங்கள் ஓட்டு எங்கள் உரிமை" என்ற வாசகத்தை முன்னிறுத்தி தவெகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.