தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தங்களது கூட்டணித் தலைமையான திமுகவின் முடிவுகளுக்கே எப்போதும் கட்டுப்பட்டு நடப்போம் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் இல்லாத சூழலில், பிற கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் தவெக-வுக்கு இது பின்னடைவாகக் கருதப்படுகிறது.