2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு தொடர்பாக வெனிசுலா அரசியலில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ இந்த விருதைப் பெற்றதாகவும், அதை டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்க விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், நோபல் கமிட்டி ஒருமுறை அறிவிக்கப்பட்ட விருதை மாற்றவோ, பகிரவோ, ரத்து செய்யவோ முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.